உலகக்கோப்பை: சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்!

உலகக்கோப்பை தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
10 ஓவர்கள் வீசிய அவர், 51 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அத்துடன் ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பையில் 11வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Related posts:
காலிறுதிக்கு முன்னேறியது பிரேஸில் அணி !
42 நாள்களில் 5 டெஸ்ட்கள் - கேலிக்குரியது என்று கொதிக்கும் வேகப்பந்து வீச்சாளர் அன்டர்சன்!
கிண்ணத்தை வென்றது யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி!
|
|