உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு!

Monday, May 27th, 2019

இங்கிலாந்தில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துவங்க உள்ள நிலையில், போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

வரும் 30ஆம் திகதி உலகக்கோப்பை ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மே 30ஆம் திகதி தொடங்கும் இந்த தொடர், ஜூலை 14ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இலங்கை அணி ஜூன் 1ஆம் திகதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதற்கு அடுத்து ஜூன் 4ஆம் திகதி ஆப்கானிஸ்தானையும், ஜூன் 7ஆம் திகதி பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது.

ஜூன் 11ஆம் திகதி வங்கதேச அணியையும், ஜூன் 15ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்ளும் இலங்கை, ஜூன் 21ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

ஜூன் 28ஆம் திகதி தென் ஆப்பிரிக்கா, ஜூலை 1ஆம் திகதி வெஸ்ட் இண்டீஸ் அணிகளை இலங்கை அணி எதிர்கொள்கிறது. இந்திய அணியை ஜூலை 6ஆம் திகதி இலங்கை எதிர்கொள்கிறது.

Related posts: