உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர்!

Tuesday, June 25th, 2019

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம், தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் புதிய சாதனை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு 38 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த நிலையில், இம்ரான் தாஹிர் 39 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதுவரை உலகக்கோப்பை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

•       மெக்ராத் (அவுஸ்திரேலியா) – 71 விக்கெட்டுகள்

•       முரளிதரன் (இலங்கை) – 68 விக்கெட்டுகள்

•       வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்) – 55 விக்கெட்டுகள்

•       ஜாகீர்கான், ஸ்ரீநாத் (இந்தியா) – 44 விக்கெட்டுகள்

•       இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா) – 39 விக்கெட்டுகள்

•       வெட்டோரி, ஜேக்கப் ஓரம் (நியூசிலாந்து) – 36 விக்கெட்டுகள்

•       இயான் போத்தம் (இங்கிலாந்து) – 30 விக்கெட்டுகள்

•       ஷகீப் அல் ஹசன் (வங்கதேசம்) – 28 விக்கெட்டுகள்

•       வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) – 27 விக்கெட்டுகள்

Related posts: