உலகக்கிண்ண T20 போட்டி ஒத்திவைக்கப்பட்டது!

Tuesday, July 21st, 2020

அவுஸ்ரேலியாவில் நடைபெறவிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 7 ஆவது இருபதுக்கு இருப்பது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை அவுஸ்ரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தற்போதைக்கு உலகக்கிண்ண போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபை வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து பரிசீலித்த சர்வதேச கிரிக்கெட் சபை போட்டியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது

Related posts: