உலகக்கிண்ணத் தொடர்தான் எதிர்காலத்தை முடிவுசெய்யும் – ஆர்ஜென்ரீனா அணித் தலைவர்

Wednesday, June 13th, 2018

ரஷ்யாவில் ஆரம்பமாகும் உலகக்கிண்ணத் தொடர்தான் தனது எதிர்கால கால்பந்தாட்ட வாழ்க்கையை முடிவுசெய்யும் என்று தெரிவித்தார் ஆர்ஜென்ரீனா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி.
உலகக்கிண்ணத் தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் செல்லப் போகிறோம் எப்படி முடிக்கப் போகிறோம் என்பதை பொறுத்துதான் எனது பன்னாட்டுக் கால்பந்து வாழ்க்கை அமையும்.
மூன்று தடவைகள் கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புக்களை நாங்கள் இழந்துள்ளோம். இந்த உலகக் கிண்ணத் தொடருக்கு பல்வேறு அணிகள் அதிக நம்பிக்கையுடன் வந்துள்ளன. அவை அணியின் ஒட்டுமொத்த திறன் மற்றும் தனிப்பட்ட வீரர்களின் திறன்களையும் எதிர்நோக்கி உள்ளன.
எனினும் ஆர்ஜென்ரீனா அணிக்கு உலகக்கிண்ணத் தொடர் எவ்வாறு அமைகிறது என்பதை வைத்தே எனது கால்பந்தாட்ட வாழ்க்கை அமையும் என மெஸ்ஸி தெரிவித்தார். ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆர்ஜென்டினா அணி எதிர்வரும் 16ஆம் திகதி தனது முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்தைச் சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து குரோசியா நைஜீரியா அணிகளை எதிர்கொள்கிறது.

Related posts: