உபுல் தரங்க விவகாரம்: அதிருப்தியில் மஹேல!

Friday, June 9th, 2017

தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் தலைமை தாங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் உபுல் தரங்கவிற்கு இரண்டு போட்டிகளில் தடை விதிக்கப்பட்டமைக்கு, அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “இது மாதிரியான தண்டனைகள் எங்கள் நாட்டுக்கு மட்டுமல்ல, ஏனைய அணிகளுக்கும் பொருந்தும்” என குறிப்பிட்டுள்ளார்.நியூசிலாந்து அணி பந்துவீச தாமதமாகியமைக்காக வில்லியம்சனுக்கு தடைவிதிக்கப்படவில்லை. மாறாக வில்லியம்சனுக்கு போட்டி சம்பளத்தின் குறிப்பிட்ட தொகை தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. இந்த பின்னணியிலேயே மஹேல ஜயவர்தன இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அணித்தலைவராக செயற்பட்ட உபுல் தரங்க, பந்து வீச்சில் 39 நிமிடங்களை கூடுதலாக எடுத்துக்கொண்டதால் அவருக்கு இருபோட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: