உபாதையிலிருந்து மீண்டு பயிற்றுவிப்பாளரை விலக்கினார் டைகர் வூட்ஸ்!

Monday, December 25th, 2017

அமெரிக்க முதற்தர முன்னணி கொல்ப் வீரர் டைகர் வூட்ஸ் அவரது பயிற்றுவிப்பாளர் கிரிஸ் கொமோவை தனது பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விடுப்பு அழித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக தனது பயிற்றுவிப்பாளர் கிரிஸ் கொமோவின் கீழ் செயற்பட்டு வந்தார்.14 மேஜர் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள வூட்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் முதுகில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சத்திரசிகிச்சை செய்துக்கொண்டார். பல போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்விலிருந்த 41 வயதான வூட்ஸ் மீண்டும் போட்டிகளில் பங்கேற்குகொண்டு வருகின்றார்.

கருத்து வெளியிட்டுள்ள டைகர் வூட்ஸ், “நான் இனிவரும் காலங்களில் தனியாக பயிற்சி செய்ய நினைத்துள்ளேன். கிரிஸ் கொமோவுடன் பயிற்சியில் ஈடுபட்ட காலங்கள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. எனினும் என்னால் அவருக்கு உரிய பலன்களை பெற்றுக்கொடுக்க முடியவில்லை”

டைகர் வூட்ஸ் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து போட்டிகளில் பங்கேற்காத நிலையில், இறுதியாக இம்மாதம் பஹாமஸில் நடைபெற்ற ஹீரோ வேர்ல்ட் செலஞ் போட்டிகளில் நான்கு சுற்றுகள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிகம் வருமான ஈட்டும் முன்னணி வீரராக அதிகம் பேசப்படும் வீரராகவும் டைகர் வூட்ஸ் காணப்படுகின்றார்.

Related posts: