உத்வேகத்தை தொடர்வோம் பயிற்சியாளர் கும்ப்ளே!

Wednesday, February 8th, 2017

இங்கிலாந்து அணிக்கு எதிராக காட்டிய உத்வேகத்தை வங்கதேச அணிக்கு எதிராகவும் தொடர்வோம் என்று இந்திய அணி பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

 இது குறித்து அவர் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதன் தொடர்ச்சியாகவே வங்கதேச அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியை கருதுகிறோம். சொந்த மண்ணில் நடந்து வரும் சீசன் இது வரை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அதே தன்னம்பிக்கையுடனும் உத்வேகத்துடனும் வங்கதேச அணியை எதிர்கொள்வோம். இன்னும் சில டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ளதால் இந்த டெஸ்ட் போட்டியை நமது வீரர்கள் கவனமாகவே கையாள்வார்கள். வங்கதேச அணி தற்போது மிகவும் மேம்பட்டுள்ளது. நியூசிலாந்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை வசப்படுத்தியதில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். ஆனால், வேகப் பந்துவீச்சாளர்களின் பங்களிப்பும் அதற்கு இணையாக அமைந்திருந்தது. இவ்வாறு கும்ப்ளே கூறியுள்ளார்.

kumble_2920183f_2920843f

Related posts: