உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அபிவிருத்திகளுக்கு பொறுப்பாக டேவின்சன்

Monday, July 17th, 2017

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்கு  பொறுப்பாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரன் டேவின்சன் ஜெராட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வின் போதே இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் சகல விதமான வேலைத்திட்டங்களையும் காண்காணிக்கும் வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: