உதைபந்தாட்டம்: வதிரி டயமன்ஸ் இறுதிக்கு சென்றது!
Monday, September 4th, 2017
இமையாணன் மத்தியின் கால்பந்தாட்டத் தொடரில் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது.
இமையாணன் மத்திய விளையாட்டுக் கழகம் 35 வயதுப் பிரிவு அணிகளுக்கு இடையில் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டமொன்றில் கரவெட்டிப் பிரதேச செயலக அணியும் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியின் முடிவில் 2:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது டயமன்ஸ் அணி.
இரண்டாம் பாதியின் 14ஆவது நிமிடத்தில் அரவிந்தனும் 16ஆவது நிமிடத்தில் ராஜ்குமாரும் டயமன்ஸின் சார்பாக கோல்களைப் பதிவுசெய்தனர். முடிவில் 4:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது டயமன்ஸ் அணி. ராஜ்குமார் ஆட்டநாயகனானார்.
Related posts:
|
|