உடற்தகுதி பெறாத வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்படார்!

Thursday, November 29th, 2018

பூரண உடற்தகுதி பெறாத வீரர்கள் இனி தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வாளர்கள் குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மத்தியில் உடற்தகுதி ஒரு நீண்டகால பிரச்சினையாக இருக்கிறது. முழுமையான உடற்தகுதி இல்லாமல், அணியில் வீரர்களை இணைத்துக் கொள்வதால், நீண்ட காலப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்கிறது.

இந்நிலையில் எதிர்காலத்தில் வீரர்கள் தங்களது முழுமையான உடற்தகுதியை நிரூபித்தப் பின்னரே அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: