உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நுவன் குலசேகரா!
Thursday, July 25th, 2019சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் நுவன் குலசேகரா அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக 184 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள குலசேகரா 199 விக்கெட்களை எடுத்துள்ளார்.
21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்களும், 58 டி 20 போட்டிகளில் 66 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
இதோடு ஒருநாள் போட்டிகளில் 4 அரைச்சதத்துடன் 1327 ரன்களை எடுத்துள்ளார்.
கடைசியாக குலசேகரா 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.
ஐ.சி.சி.யின் சர்வதேச ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஒரேயொரு இலங்கை வீரர் குலசேகரா தான்.
Related posts:
நல்லூர் பிரதேச செயலக அணி மேசைப் பந்தாட்டத்தில் சம்பியன்!
ஐ.பி.எல். தொடர் - கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி!
ஆர்ஜன்டினா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது - பிரான்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி!
|
|