உசைன் போல்ட் மீண்டும் களமிறங்கவுள்ளார்!

Saturday, March 3rd, 2018

சர்வதேச குறுந்தூர ஓட்ட ஜாம்பவனான உசைன் போல்ட் குறுந்தூர ஓட்டப்போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது காற்பந்து போட்டித் தொடரொன்றில் பங்கேற்கவுள்ளதாகவெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் யுனிசெப் அமைப்புக்கு நிதி சேகரிக்கும் முகமாக இந்த காற்பந்து தொடரில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருந்து தெரிவிக்கும் போது தான் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் காற்பந்து வீரராக முயற்சித்து வருவதாகவும்குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டித் தொடரில் உசைன் போல் உலக காற்பந்து அணியில் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவராக கலந்து கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: