உசைன் போல்ட்டின் அதிரடி அறிவிப்பு !

Wednesday, February 22nd, 2017

ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரரும், உலக சாதனைக்கு சொந்தக்காரருமான உசைன் போல்ட் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தான் கலந்துக்கொள்ள போவதில்லையென தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது குறித்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மூன்று வருடங்கள் 9 தங்க பதக்கத்தை வென்று சாதனையை நிலைநாட்டியிருந்த உசைன் போல்ட் கடந்த ஜனவரி மாதம் குறித்த சாதனையை தவறவிட்டார்.

2008 ஆம் ஆண்டு அஞ்சல் ஓட்டப்போட்டியில் தனது சக வீரர் ஊக்கமருந்து உட்கொண்டமை உறுதி செய்யப்ட்டதால் போல்ட்டின் தங்கப்பதக்கம் திரும்பி பெறப்பட்டதுடன், அவரது சாதனையும் பறிபோனது.

இந்நிலையில் அடுத்த ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் குறித்த சாதனையை நிலைநாட்டுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், உசைன் போல்ட் தான் அடுத்த ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளப்போவதில்லையென அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

201606032119374948_Usain-Bolt-could-lose-2008-Olympics-relay-gold_SECVPF

Related posts: