உசேன் போல்ட் வெற்றி!

Monday, June 12th, 2017

சொந்த மண்ணில் நடந்த 100 மீட்டர் கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் பந்தயத்தில், இறுதியாக கலந்துகொண்ட உலகின் அதிவேக மனிதராக வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட், வெற்றி பெற்றுள்ளார்.

ஜமைக்கா தலைநகரான கிங்ஸ்ட்டன் நகரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற 100 மீட்டர் கிராண்ட் பிரிக்ஸ் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப்போட்டியில் உசேன் போல்ட் பங்கேற்றார். ஐந்தாம் எண் கொண்ட ஓடுபாதையில் இருந்து தனது ஓட்டத்தை தொடங்கிய உசேன் போல்ட், 10.03 வினாடிகளில் எல்லைக்கோட்டை கடந்து முதலிடத்தை பெற்றார்.

சொந்த மண்ணில் உசேன் போல்ட் கலந்துகொள்ளும் கடைசி ஓட்டப் பந்தயம் என்பதால், சர்வதேச தடகளப் போட்டிகளின் தலைமை சங்கத் தலைவர் செபாஸ்டியன் கோ மற்றும் ஜமைக்கா நாட்டின் பிரதமர் ஹெண்ட்ரு ஹோல்னெஸ் ஆகியோர் இப்போட்டியை நேரில் கண்டு களித்தனர். மேலும் சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் அரங்கத்தை சோடித்தனர்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறவுள்ள சர்வதேச தடகளப் போட்டியுடன் ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: