ஈரான் ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை!

ஈரானில் நடைபெறவுள்ள 23 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று கலந்து கொள்வதற்கு இலங்கை கரப்பந்தாட்டச் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
1995ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த வீரர்கள் இதில் கலந்து கொள்ள முடியமென்று இலங்கை கரப்பந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஹெய்யன்துடுவ இளைஞர் சேவைகள் மன்ற கரப்பந்தாட்டப் பயிற்சி நிலையத்தில் இதற்கான போட்டிகள் நேற்று நடைபெற்றது. பயிற்றுவிப்பு அமைப்பிலிருந்து வீரர்கள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமபோஷா கிண்ண உதைப்பந்தாட்டம் சென்.ஹென்றியரசர் கல்லூரி வெற்றி!
2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில்?
முதலாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்!
|
|