ஈரானில் காற்பந்து போட்டிகளைப் பார்வையிடச் சென்ற  பெண்கள் கைது!

Saturday, March 3rd, 2018

ஈரான் தெஹ்ரானில் உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான காற்பந்து போட்டிகளைக் காணச் சென்ற 35 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் இந்த போட்டியில் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்ததாகதெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் குறித்த பெண்கள் கைது செய்யப்படவில்லை என்றும் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அந்தநாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சின்பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஈரான் புரட்சியின் பின்னர் அங்கு பெண்கள் காற்பந்துப் போட்டிகளை பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: