இஷாந்த் ஷர்மாவுக்கு ஐசிசி அபராதம்!

Monday, August 6th, 2018

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இப்போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு விதி எண் 2.1.7-ன் படி ஊதியத்தில் இருந்து 15 சதவீத தொகையை அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் லெவல் 1-ன் படி ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

மாலன் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் அவரை நோக்கி ஆக்ரோஷமான செயலில் ஈடுபட்டதாக நடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது தனது செயலுக்கு இஷாந்த் ஷர்மா வருத்தம் தெரிவித்தார்.

Related posts: