இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை: 2-ஆவது தடவையாகவும் கிண்ணத்தை வென்றது இந்தியா!

Monday, December 19th, 2016

இளையோர் ஹாக்கி உலக கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

நேன்று (ஞாயிற்றுகிழமை) லக்னோவில் நடைபெற்ற இளையோர் ஹாக்கி உலக கோப்பை தொடரின் இறுதியாட்டத்தில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் களமிறங்கின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இந்தியாவின் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில், ஆட்டத்தின் 10 நிமிடங்களுக்குள் மிகவும் லாவாகமாக குர்ஜந்த் சிங் ஒரு கோலடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

பின்னர், இரு அணி வீரர்களும் கடுமையாக போராடி வந்த சூழலில், இந்திய வீரர் சிம்ரன்ஜீத் சிங் மற்றொரு கோலடித்தார். இதனால் 2-0 என்று மிகவும் வலுவான முன்னிலை பெற்றது இந்தியா.

ஆட்டம் முடிவடையும் தறுவாயில் பெல்ஜியம் ஒரு கோல் அடிக்க, பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு இளையோர் ஹாக்கி உலக கோப்பையை இந்தியா மீண்டும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

_93018065_hockey

Related posts: