இளம் பறவைகள் உதைப்பந்தாட்டம் : அலை ஓசை – யுனிபைட் இறுதிப் போட்டிக்க தகுதி!

Monday, October 17th, 2016

சிலாவத்தை இளம் பறவைகள் வி.க நடத்தும் மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் அரை இறுதிப்போட்டியில் உடுப்புக்குளம் அலை ஓசை வி.க எதிர்த்து அளம்பில் இளந்தென்றல் வி.க மோதியது. இப்போட்டியில் உடுப்புக்குளம் அலை ஓசை வி.க 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மாலை நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் வவுனியா யுனிபைட் வி.க எதிர்த்து முள்ளியவளை வளர்மதி வி.க மோதியது. இதில் வவுனியா யுனிபைட் வி.க தண்ட உதை மூலம் வெற்றியைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

14

Related posts: