இலண்டன் தீவிரவாதத் தாக்குதல்: ஐ.சி.சி முக்கிய அறிவிப்பு!

Monday, June 5th, 2017

இலண்டன் நகரினை மையப் பகுதியில் உள்ள இலண்டன் பாலத்தில் மேற்கொண்ட தீவிரவாத தாக்குதல் குறித்து பல கோணங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் கிண்ண தொடர் இங்கிலாந்தில் நடந்து கொண்டிருப்பதால், சர்வதேச கிரிக்கெட் நிறுவனமான ஐ.சி.சி, ‘கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிகவும் முக்கியமான விடயம்’ என தெரிவித்துள்ளது.

இலண்டனில் இதைப் போன்று தொடர் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதால், சாம்பியன்ஸ் கிண்ண தொடர் இரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.ஆனால், திட்டமிட்டது போலவே ஜூன் 1-ம் தேதி ஆரம்பமான சாம்பியன்ஸ் கிண்ண தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில்தான் ஐ.சி.சி, ‘ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு அடுத்து பெண்கள் உலகக் கோப்பை வருகிறது. குறித்த இந்த இரண்டு தொடர்களிலும் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு மிக முக்கியமான ஒன்று.

இலண்டனில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related posts: