இலண்டன் ஒலிம்பிக்கில் வென்ற தங்கப்பதக்கம் யாருக்கு?
Sunday, September 4th, 2016
இலண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரருக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய மல்யுத்த வீரரான யோகஸ்வர் தத் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.இந்நிலையில் லண்டன் ஒலிம்பிக்கில் அரையிறுதியில் யோகஸ்வர் தத்துடன் போட்டியிட்டு வென்ற ரஷ்யா விரர் குடுக்கோவ் வெள்ளி பதக்கம் வென்றார். ஆனால் ரியோ ஒலிம்பிக் போட்டி துவங்குவதற்கு முன் குடுக்கோவ்வின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தது ஒலிம்பிக் கமிட்டி.
அதில் குடுக்கோவ் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானதால், அவருடைய வெள்ளி பதக்கத்தை பறிமுதல் செய்த ஒலிம்பிக் கமிட்டி, அப்பதக்கம் யோகஸ்வர் தத்துக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது.ஆனால் யோகேஸ்வர் தத்தோ வெள்ளி பதக்கத்தை குடுக்கோவ் குடும்பத்தாரே வைத்துக்கொள்ளட்டும் என பெருந்தன்மையாக கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது யோகேஸ்வர் தத்துக்கு தங்கப்பதக்கம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மல்யுத்த பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அசர்பைசான் நாட்டை சேர்ந்த தக்ருல் அஸ்கரோவுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதில் அவருக்கு எதிர் மறையாக முடிவு வந்தால், அவர் தங்கப்பதக்கம் பறிக்கப்படும்.
இதே போன்று இந்திய மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத்துவுக்கும் பரிசோதனை செய்யப்படும். அதில் இவர் ஊக்க மருந்து பயன்படுத்த வில்லை என்று முடிவு வந்தால், தக்ருல் அஸ்கரோவிடம் பறிக்கப்பட்ட தங்கப் பதக்கம் யோகேஸ்வரர் தத்துக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.இதனால் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களும், ரஷ்ய ரசிகர்களும் இந்த பரிசோதனைக்கான முடிவை எதிர்பார்த்து காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|