இலண்டனில் சிக்கிய சவுரவ் கங்குலி!
Sunday, January 1st, 2017முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிவாகை சூடிய அணித்தலைவர் என வர்ணிக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம் பெற்ற அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் கங்குலி.
இவர் கடந்த 1996ல் பிரித்தானியா சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தற்போது வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது, ஒரு கும்பலிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கிய கங்குலி, லண்டனின் பின்னர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கேரேஜில் ஒரு குழு இருந்தது. அதில் இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் இருந்தனர்.
அவர்கள் குடித்துக் கொண்டிருந்தனர். அதில் ஒருவன் எங்களை முறைத்துக்கொண்டே இருந்தான். நான் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என உடன் இருந்த சித்துவிடன் சொன்னேன். இதை கவனித்த அந்த நபர் எங்களை நோக்கி வந்து என்னைப்பார்த்து என்ன சொன்னாய் என்றான்.
இதைக் கேட்டு ஆத்திரம் கொண்ட சித்து அவனை தடுக்க, பிரச்சனை துவங்கியது. உடனே நான் என்னுடைய கண்ணாடியை கழட்டி தரையில் வீசிவிட்டு எது நடந்தாலும் சந்திக்க தயாரானேன். பின்னர் ஒரு ரயில் நிலையம் வந்தது அப்போது நான் அவனை தள்ளிவிட்டேன். அவன் கீழே விழுந்தான். அவன் எழுந்தபோது, என் முகத்தில் துப்பாக்கி இருப்பதைத்தான் பார்த்தேன்.
அப்போது என் மனதில் என் வாழ்நாள் இங்கேயே முடிந்துவிடும் என நினைத்தேன். அப்போது ஒரு பெண் அவனை பின்பக்கம் இருந்து தாக்கி, எங்களை காப்பாற்றினார். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|