இலங்கை வீரர்களுக்கு வந்த  சாதனை!

Friday, November 25th, 2016

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் மூன்று அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

பரபரப்பான இந்தப் போட்டியில் கடைசி பந்தில் இலங்கை அணி 1 ஓட்டம் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

இதன்படி அணித்தலைவர் உபுல் தரங்காவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

i3

Related posts: