இலங்கை வீரர்களின் சீருடை தொடர்பில் ஒலிம்பிக் குழாமிடம் அமைச்சர் நாமல் அறிக்கை கோரியுள்ளார்!

Thursday, August 5th, 2021

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இலங்கை வீரர்களது உத்தியோகபூர்வ ஆடை தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை ஒலிம்பிக் குழாமிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள சென்றிருந்த இலங்கை வீரர் ஒருவர் தமது போட்டி இலக்கத்தை தமது ஆடையில் ஒட்டி இருந்த விதம் தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இந்தவிடயம் இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இந்த விடயம் குறித்து தாம் இலங்கை ஒலிம்பிக் குழுமத்திடம் அறிக்கை கோரி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் வீரர்களது ஒழுக்கவிதிகள் குறித்த ஏற்பாடுகள் இல்லாத நிலையில் அதனை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: