இலங்கை வீரர்களின் உடலில் ஜி. பி. எஸ்.

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த அணியைத் தயார் செய்யும் பொருட்டு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெய்னின் புகழ்பெற்ற கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனோ அணியின் வீரர்களுக்கு முன்பொரு தடவை செய்யப்பட்ட இந்த முறையை இலங்கை கிரிக்கெட் சபை தற்போது பின்பற்றியுள்ளது. இதற்காக இலங்கை மதிப்பில் சுமார் ஒரு கோடியே 25 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளினால் ஒருவரான ஆஸ்லே டி சில்வா தெரிவித்ததாவது:
2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கான அணியைத் தயார் செய்யும் பணியில் நாங்கள் ஏராளமான தொழில்நுட்பங்களையும் நவீன முறைகளையும் அணிக்குள் புகுத்தி வருகிறோம். கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின் நாங்கள் உலகக் கிண்ணத் தொடரை வெல்லவில்லை. ஹத்துரு சிங்கவின் பயிற்சியின் கீழ் சில தோல்விகளும் வெற்றிகளும் கிடைத்துள்ளன. வீரர்களின் உடலில் தற்போது பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி ஒவ்வொரு வீரர்களின் திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் என்றார்.
ஜி.பி.எஸ். கருவி மூலம் வீரர்களின் மைதானச் செயற்பாடுகளையும் அவர்களின் வேகம் உள்ளிட்ட விடயங்களையும் ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் இலகுவாகக் கண்காணிக்க முடியும்.
Related posts:
|
|