இலங்கை வீரரின் புதிய சாதனை

Thursday, October 26th, 2017

இலங்கை அணியின் ஆரம்ப வீரர் நிரோஷன் டிக்வெல்ல 50 ஆட்டங்களில் Duck அவுட் ஆகாமல் சாதனை படைத்துள்ளார்.

நிரோஷன் டிக்வெல்ல இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரராக உள்ளார்.தான் ஆடிய 58 இன்னிங்க்ஸ்களிலும் ஓட்டங்கள் எடுத்த அவர் பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் தான் முதன் முறையாக Duck அவுட் ஆனார்.

இதன் மூலம் இலங்கையின் முன்னாள் வீரரும் வங்கதேசத்தின் தற்போதைய பயிற்சியாளருமான சண்டிகா ஹதுரசிங்காவின் சாதனையை முறியடித்துள்ளார்.ஹதுரசிங்கா 52 ஆவது இன்னிங்க்ஸில் தான் முதல் Duck அவுட் ஆனார். டிக்வெல்ல டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மொத்தமாக இதுவரை 50 ஆட்டங்களில் 58 இன்னிங்க்ஸ் ஆடியுள்ளார்.

Related posts: