இலங்கை வீரரகளுக்கான சிறப்பு பயிற்சி – பயிற்சியாளர்!

இலங்கை அணிக்கான புதிய தலைமைப்பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்க நேற்றைய தினம் தனது உத்தியோகபூர்வ பயிற்றுவிப்பை ஆரம்பித்துள்ளார்.
பங்களாதேஸிற்கான தொடரை தனது முழுமையான தொடராக இலக்கு வைத்து இலங்கை வீரரகளுக்கு உத்தியோகபூர்வ பயிற்றுவிப்பை தேர்வு செய்யப்பட்ட 23 வீரர்களை உள்ளடக்கி ஆரம்பித்துள்ளார், இந்த பயிற்றுவிப்பின் கீழ் தேர்வாகும் வீரர்கள் பங்களாதேஸ் தொடருக்கான குழாமில் இணைக்கப்படுவார்கள்.
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் சிறப்பு பயிற்றுவிப்பு இடம்பெறுகின்றது. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஹத்துருசிங்க பயிற்றுவிப்பை வழங்கி வருகின்றார்.
நடப்பு வருடத்தில் மட்டும் 40 போட்டிகளில் இலங்கை அணி தோல்வியைத்தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் போர் : யாழ் மத்தி நிதான ஆட்டம்
தென்னாபிரிக்க தொடரில் இளம் வேகப்பந்துவிச்சளர் ஒருவருக்கு இலங்கை அணியில் வாய்ப்பு!
இலங்கை வரும் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் அணி!
|
|