இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு..!

Thursday, August 29th, 2019

இலங்கை வலைப்பந்து சம்மேளனத்திற்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், புதிய தலைவராக லக்ஷ்மி விக்டோரியா தெரிவாகியுள்ளார்.

இவருக்கு போட்டியாக களத்தில் இருந்த முன்னாள் செயலாளர் சஞ்சீவனி வனசிங்க தேர்தலுக்கு முன்பாக தனது வேட்பு மனுவை மீளப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த தேர்தலானது விளையாட்டு சட்டத்தை மீறி இடம்பெறுவதாக தெரிவித்தே, அவர் தனது வேட்பு மனுவை மீளப்பெற்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக லக்ஷ்மி விக்டோரியா தெரிவானதோடு, அதன் செயலாளராக சம்பா குணவர்தனவும், உப செயலாளராக சுமித்ரா ரணசிங்கவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் உபதலைவராக டி.எம்.பி.குமாரிஹாமி தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: