இலங்கை – மேற்கிந்தியதீவுகள் அணிக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பம்!

Wednesday, June 6th, 2018

பத்து வருடங்களுக்கு பின்னர் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிரினிட்டியில் உள்ள குவின்ஸ் பார்க் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இதுவரை டெஸ்ட் தொடர் ஒன்றை கூட கைப்பற்றியது இல்லை. இதனால் இலங்கை அணிக்கு கிரிக்கட் வரலாற்றில் சாதனை ஒன்றை நிலை நாட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

இறுதியாக 2008 ஆம் ஆண்டு இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இன்றைய போட்டி இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகள் நாட்டில் பங்குபற்றும் 8 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரங்கன ஹேரத்தை தவிர தற்போதைய இலங்கை அணியில் வேறு எந்தவொரு வீரரும் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: