இலங்கை மற்றும் இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று!
Thursday, August 29th, 2024
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய குசல் மெண்டிஸ் மற்றும் விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் அணியில் இடம்பிடிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக பெத்தும் நிஸ்ஸங்க மற்றும் லஹிரு குமார அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதாலும், இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
000
Related posts:
|
|