இலங்கை போட்டிகளை பார்ப்பதில்லை – ரணதுங்கா!
Thursday, August 3rd, 2017இலங்கை கிரிக்கெட் அணியின் சமீபகால மோசமான செயலையடுத்து அந்த அணி விளையாடும் போட்டிகளை காண்பதை தான் நிறுத்தி விட்டதாக அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை தோல்வியை தழுவியது. இந்நிலையில் இலங்கையின் செயல்பாடு காரணமாக வெறுப்படைந்துள்ள அணியின் முன்னாள் தலைவர் ஜாம்பவான் ரணதுங்கா இலங்கை விளையாடும் போட்டிகளை பார்ப்பதில்லை என கூறியுள்ளார்.
இலங்கை போட்டிக்கு பதிலாக இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை விரும்பி பார்ப்பதாக ரணதுங்கா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை அணி வீரர்களும், நிர்வாகிகளும் நாட்டுக்காக வெற்றியை தேடி தருவோம் என நினைப்பதை விட வருவாய், வெளிநாட்டு பயணங்கள் என அதை நினைத்து தான் அதிகம் கவலைப்படுகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவில் மறுசீரமைப்பு தேவை என நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் ரணதுங்கா கூறியுள்ளார்
Related posts:
|
|