இலங்கை – பாகிஸ்தான் – முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று!

Friday, October 13th, 2017

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது.

பாகிஸ்தானில் அணியின் மொஹமட் அமீர் மற்றும் அசார் அலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதியாக செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடி வென்ற பாகிஸ்தான் அணியை இன்றைய போட்டிக்கு களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அஹமட் செசாட் மற்றும் பஃகார் சமான் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன் வேகப்பந்து வீச்சாளர் ருமன் ராயிஸும் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேநேரம் இந்திய அணிக்கு எதிரான தொடர் தோல்வியை அடுத்து இலங்கை அணி விளையாடும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். இன்றைய போட்டிக்கான அணியில்  திஸர பெரேராவும் அஞ்சலோ மெத்தீஸிற்கு பதிலாக தினேஸ் சந்திமாலும் அணியில் இணைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் விஷ்வா ஃபெர்ணாண்டோவும் அணியில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறவுள்ள டுபாய் ஆடுகளம் பெரும்பாலும் மிதவேக மற்றும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் அங்கு 300 ஓட்டங்களைப் பெறுவது என்பது அரிதானவிடயமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஃப்ராஷ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணி இதுவரையில் 9 போட்டிகளில் விளையாடி இருப்பதுடன்இ அவற்றில் 7 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு ராச்சியத்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 28 போட்டிகளில் வென்றிருப்பதுடன் இலங்கை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது

Related posts: