இலங்கை – பாகிஸ்தான் இரவு பகல் ஆட்டம் இன்று ஆரம்பம்!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகிறது.
இந்த போட்டி இலங்கை கிரிக்கட் அணி விளையாடும் முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியாகும்.இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணி 3 வேகப்பந்து வீச்சாளர்களுடனும், 1சுழற்பந்து வீச்சாளருடனுமாக முன்னைய போட்டியைப் போன்றே களமிறங்கவுள்ளது.
அத்துடன் அணியில் ஹசன் அலிக்கு பதிலாக வஹாப் ரியாஷ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்.இதனைத் தவிர வேறு மாற்றங்கள் பாகிஸ்தான் அணியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் காயம் காரணமாக லஹிரு திரிமன்னே விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம தமது முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.இன்றைய போட்டிக்கான ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.எனினும் இளஞ்சிவப்பு நிறத்திலான பந்து, இரவு வேளைகளில் எவ்வாறான மாறுதல்களுக்கு உட்படும் என்பது குறித்து இன்னும் அறியமுடியாதிருப்பதாக ஆடுகள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஆரம்பிக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெறாவிட்டால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் தரவரிசையில் 7ஆம் இடத்துக்கு பின்தள்ளப்படும்.அவ்வாறு 7ஆம் இடத்துக்கு பாகிஸ்தான் செல்லுமாயின், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி அடையும் தரவரிசையின் மிகத்தாழ்மட்டம் இதுவாக இருக்கும்.கடந்த ஆண்டு அந்த அணி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது
Related posts:
|
|