இலங்கை பந்து வீச்சளார் காயம்!

Monday, June 10th, 2019

பிரிஸ்டல் மைதானத்தில் பயிற்சியின் போது இலங்கை நட்சத்திர பந்து வீச்சளார் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், எதிர்வரும் யூன் 11ம் திகதி பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதவுள்ளன.

இதற்காக, இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பயிற்சியின் போது இலங்கை நட்சத்திர பந்து வீச்சளார் நுவன் பிரதீப் காயமடைந்துள்ளார்.

வலை பயிற்சியின் போது குசால் பெரேராவுக்கு, நுவன் பிரதீப் பந்து வீசியுள்ளார். பெரேரா பந்தை பிரதீப்பை நோக்கி அடிக்க, பந்தை தடுக்க முயன்ற போது, பந்து தாக்கி அவரின் சுண்டு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே மருத்துவ ஊழியர்கள் சிகிச்சைக்காக பிரதீப்பை அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்ற தகவல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: