இலங்கை படுதோல்வி: உச்சத்திற்கு சென்றது தென் ஆப்பிரிக்கா!

Sunday, February 12th, 2017

நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5-0 என வென்ற தென் ஆப்பிரிக்கா அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தொடரை 5-0 என கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா அணி 119 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

113 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்திலும், இந்தியா 112 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இலங்கை 98 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் 761 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளரான தாஹிர் இலங்கை எதிரான தொடரில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் 871 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய வீரர் வர்னர் முதலிடத்தை பிடித்துள்ளார். 853 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 2-வது இடத்தில் உள்ளனர்.

தொடர்ந்து 852 புள்ளிகளுடன் இந்திய வீரர் விராட்கோஹ்லி 3-வது இடத்திலும், 788 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா டு பிளிசிஸ் 4-வது இடத்திலும், 778 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா வீரர் டி காக் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

13731563532

Related posts: