இலங்கை – பங்களாதேஷ் அணி மோதும் தீர்மானம் மிக்க போட்டி இன்று!

சுதந்திரக் கிண்ணத் தொடரின் ஆறாவது போட்டி இன்று இரவு 07.00 மணிக்கு கொழும்பு -ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்தப் போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகின்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதிப் போட்டிற்கு தகுதி பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் விளையாடும் வீரர்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் –
இலங்கை அணி –
தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், குசல் பெரேரா (wk), உபுல் தரங்க, திசர பெரேரா (capt), தசுன் ஷானக , ஜீவன் மென்டிஸ் , அகில தனஞ்சய, சுரங்க லக்மால் , துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப்
பங்களாதேஷ் –
தமீம் இக்பால், சௌம்யா சர்க்கர் , லிடன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம் (wk), மஹ்மதுல்லாஹ் , ஷாகிப் அல் ஹசன் (capt), சாபிர் ரஹ்மான், மெஹிதி ஹசன் , முஸ்தபிதூர் ரஹ்மான், ருபெல் ஹுசேன் , அபூ ஹைதர்
Related posts:
|
|