இலங்கை, -பங்களாதேஷ் அணிகள் தம்புள்ளவில் இன்று பலப்பரீட்சை!

Saturday, March 25th, 2017

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை பகலிரவுப்போட்டியாக ஆரம்பமாகிறது. இதேவேளை மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.

இரு அணிகளும் மொத்தம் 38 போட்டிகளில் ஆடி இலங்கை அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.அத்துடன் ஒரு ஆட்டம் முடிவின்றி நிறைவு பெற்றுள்ளது.

பங்களாதேஷ் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றமை விசேட அம்சமாகும். ஆனால் இரு அணிகளுக்கும் 2019 ம் ஆண்டு உலக்கிண்ண போட்டிகளில் நேரடியாக தகுதி பெறுவதில் தரவரிசையில் தாக்கம் செலுத்தும்.இலங்கை அணி தற்போது தரவரிசையில் 6 ஆவது இடத்தில் உள்ளது.ஆனால் பங்களாதேஷ் அணி 92 புள்ளிகள் பெற்று 7 ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் இலங்கை அணியை விட 7 புள்ளிகள் குறைவாக காணப்படுகிறது.

இலங்கை அணி 98 புள்ளிகள் பெற்றுள்ளது.இலங்கை அணி 3-0 என வெற்றி பெற்றால் 100 புள்ளிகளுடன் அதே இடத்தில் இருக்கும் .பங்களாதேஷ் அணி 88 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் அணிக்கு பின் செல்லும்.எது எப்படியிருந்தாலும் பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான வரலாற்று டெஸ்ட் ஆட்டத்தின் போது பெற்ற வெற்றியுடன் தொடரை வெற்றி கொள்ளும் முனைப்பில் உள்ளது.

இதேநேரம் இலங்கை அணிக்கு மற்றுமொறு சவால் காத்திருக்கின்றது. பாகிஸ்தான் -மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் ஒரு நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளதால் இலங்கை உட்பட மூன்று அணிகளும் சற்று சிக்கலான சூழ்நிலையில் உள்ளது.பாகிஸ்தான் 89 புள்ளிகளையும் மேற்கிந்தீவு 84 புள்ளிகளையும் பெற்றுள்ளது.ஆனால் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஏப்ரல் 7ம் திகதி முதல் 11 ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.அது இவ்விரு அணிகளும் 2019ம் ஆண்டு உலக்கிண்ண போட்டியில் செல்வாக்கு செலுத்தும்.இங்கிலாந்து உட்பட ஏழு அணிகள் வரும் செப்படம்பர் 30 திகதி தெரியவரும் யார் உலகக்கிண்ண போட்டிக்கு தெரிவாவது என.உலக்கிண்ண போட்டியில் 10 அணிகள் மோதவுள்ளமை விசேட அம்சமாகும்.இதேவேளை ஒரு நாள் தரவரிசை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.

கடந்த புதன்கிழமை பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் விக்கெட் காப்பானரான குசால் பெரேரா 78 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இருந்து விக்கெட் காப்பாளர் நீக்கப்பட்டுள்ளார்.

இதனால் தம்புள்ளவில் இன்றும் 28-ம் திகதியும் நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார். கொழும்பில் ஏப்ரல் 1-ம் திகதி தொடங்கும் போட்டியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அணியின் முகாமையாளர் அசாங்க குருசிங்க கூறுகையில் ‘‘குசால் பெரேராவின் காயம் சிறிய அளவில்தான் உள்ளது. அவர் 2-வது போட்டியில் இடம்பெறுவதற்கு உடற்தகுதியை பெற்று விடுவார். இருந்தாலும், கொழும்பில் இருந்து தம்புள்ளவிற்கு அணி செல்லும்போது அவர் சக வீரர்களுடன் செல்லவில்லை.அத்துடன் மாற்று வீரராக மிலிந்த சிறிவர்தன பெரோவின் இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம்திகதி கொழும்பில் நடைபெற இருக்கும் போட்டியின்போது அணியுடன் இணைந்து கொள்வார்’’ என்றார்.

Related posts: