இலங்கை – நியூசிலாந்து டி20 போட்டிகளில் மாற்றம்..!

Friday, August 2nd, 2019

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைப்பெறவுள்ள முதலிரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளும் பல்லேகலை சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவரும் திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த போட்டிகள் பல்லேகலை மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

செப்டெம்பர் 6 ஆம் திகதி பல்லேகலையில் இடம்பெறவுள்ள 3 வது இருபதுக்கு இருபது போட்டியில் எவ்வித மாற்றமும் இல்லை.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணியானது, 2 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: