இலங்கை – நியூசிலாந்து: இரண்டாம் நாள் ஆட்டம் இன்று.!

Friday, August 23rd, 2019

இலங்கை மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதித்து ஆரம்பமானது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தமது முதலாவது இணிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கட்டுக்களை இழந்து 85 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் மறுமுனையில் அஞ்சலோ மெத்திவ்சும் ஆட்டம் இழக்காதுள்ளார்.

இதேவேளை இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி தமது முதலாம் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நேற்றை ஆட்ட நேர முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. குறித்த போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

Related posts: