இலங்கை நட்சத்திர வீரர் தரப்படுத்தலில் முன்னேற்றம்!

உலக லெவன் அணியில் கலக்கிய இலங்கை நட்சத்திர வீரர் திசர பெரேரா, ஐசிசி வெளியிட்ட டி20 போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 16 இடங்கள் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான உலக லெவன் அணியில் கலக்கிய இலங்கை அணி வீரர் திசர பெரேரா துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் 16 இடங்கள் முன்னேறி 53 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.உலக லெவன் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது டி20 போட்டியில் உலக லெவன் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த போட்டியில் திசர பெரரா அபாரமாக துடுப்பாடியிருந்தார்.
அவர் அந்த போட்டியில் 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, டி20 பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் பெரரோ 13 இடங்கள் முன்னேறியுள்ளார். மேலும் டி20 போட்டியின் ஆல்ரவுண்டர் வீரர்கள் பட்டியலில் 19 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
Related posts:
|
|