இலங்கை தோற்றாலும் டில்ஷான் படைத்த புதிய சாதனை

Saturday, March 5th, 2016

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தொடக்க வீரர் டில்ஷான் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆசியக்கிண்ண டி20 தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷான் 16 பந்தில் 2 பவுண்டரியுடன் 18 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

இதன் மூலம் டில்ஷான் (1,676 ஓட்டங்கள், 73 போட்டி) டி20 சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் நியூசிலாந்தின் மார்ட்டின் குப்திலை (1,666 ஓட்டங்கள், 57 போட்டி) பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மெக்கல்லம் 71 போட்டிகளில் 2,140 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

மேலும், டி20 போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ள மெக்கல்லத்தை (199 பவுண்டரி) டில்ஷான் சமன் செய்துள்ளார்.

Related posts: