இலங்கை தொடர்: வங்கதேச கிரிக்கெட் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு!
Thursday, May 9th, 2019இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடவிருந்த வங்க தேச அணி, குறித்த சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த வங்கதேச அணி ஜூலை 25, 27 மற்றும் 29ஆம் திகதி என இலங்கை அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுவதாக அட்டவணையிட்டிருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் தாக்குதலை கருத்தில் கொண்டும் இலங்கையில் நிலவி அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இலங்கை சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைப்பதாக வங்கதேச கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வங்கதேச வெளியுறவு அமைச்சத்துடனும், இலங்கையில் உள்ள வங்கதேச உயர் ஆணையத்திடம் ஆலோசித்து வருவதாகவும், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் ஆணையத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வங்கதேக கிரிக்கெட் ஆணையத்தில் தலைமை நிர்வாகி நிஸ்பமுதின் சௌத்ரி தெரிவித்துள்ளார்
Related posts:
|
|