இலங்கை தொடரில் இவர்களே சாதிப்பர் – முரளிதரன்!

இலங்கை அணியுடன் நடக்கும் தொடரில் இந்திய அணியின் அஸ்வின், ஜடேஜா சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று நம்புவதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 22-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20-ஆம் திகதி வரை சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடரின் திருவள்ளூர் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அவர், தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் சிறப்பான ஒன்று எனவும், இத்தொடரில் வீரர்கள் திறமையை நிரூபித்தால், ஐ.பி.எல் மற்றும் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
மேலும் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இத்தொடரின் இந்திய அணியின் அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
Related posts:
|
|