இலங்கை தேசிய வலைபந்தாட்ட அணியில் யாழ். வீராங்கனைகள்!
Saturday, September 1st, 2018இலங்கை தேசிய வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும், அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் மற்றும் எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவருமே இலங்கை வலைபந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.
இந்நிலையில், இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதியை பெறும் நோக்கில் சிங்கப்பூரில் நாளை ஆரம்பமாகும் ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் இலங்கை பங்குபற்றவுள்ளது.
அதேநேரம் ஆசிய வலைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை இலங்கை வென்றெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாகிஸ்தான் அணி தலைவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை!
தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் தினேஷ் சந்திமால்!
டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா நீக்கம்!
|
|