இலங்கை தான் காரணம்: வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரஹானே!

Wednesday, March 29th, 2017

தர்மசாலா டெஸ்டில் இறுதி கட்டத்தின் போது அதிரடியாக விளையாடியதற்கு இலங்கை தான் காரணம் என இந்திய அணித்தலைவராக செயல்பட்ட ரஹானே தெரிவித்துள்ளார். தர்மசாலா டெஸ்டில் ரஹானே தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி 2-1 என தொடரை கைப்பற்றியது.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் களமிறங்கிய ரஹானே 4 பவுண்டரி, 2 சிக்சர் என அதிரடியாக விளையாடி 38 ஓட்டங்கள் எடுத்தார்.

போட்டிக்கு பின் ரஹானே கூறியதாவது, அனைவருக்கும் பாராட்டுக்கள். வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். குறைந்த ரன்களை இலக்காகக் கொண்ட போட்டிகளில் 30-40 ரன்களை விரைவில் எடுப்பது அவசியம்.

நாம் இலங்கைக்கு எதிரான கால்லே டெஸ்ட் போட்டியில் தயங்கித் தயங்கி ஆடி தோல்வியில் முடிந்தது நினைவுக்கு வந்தது. அதனால்தான் இன்று அடித்து ஆடுவது என்ற முடிவெடுத்தேன். ஆஸ்திரேலியா அருமையான, சவாலான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணித்தலைவராக மனநிறைவான வெற்றி இது. அனைவருமே சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறேன் என கூறியுள்ளார்.

Related posts: