இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் புதிய தரவரிசையில் முன்னேற்றம்!

Friday, January 12th, 2018

புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் முன்னேறியுள்ளார்.

அவர் வருட ஆரம்பத்தில் 10 ஆவது இடத்தில் இருந்தார். எனினும் புதிய சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 743 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதில் முதலாவது இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸமித் 947 புள்ளிகளையும் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் 881 புள்ளிகளையும் பெற்று உள்ளனர்.

மேலும் இந்தப் பட்டியலில் இரண்டவாது இடத்தில் இருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 880 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

Related posts: