இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்!

Friday, July 7th, 2017

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இலங்கை அணியின் தலைவருக்கு 20 சதவீதமும் மற்றும் அணி வீரர்களுக்கு 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், இலங்கை அணி பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக எடுத்து கொண்டதாக கூறி அந்த அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலா மேத்யூஸ்-க்கு நேற்றைய போட்டியின் சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் .இலங்கை அணியின் வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஐசிசி வகுத்துள்ள வீரர்களின் நடத்தை விதிமுறையின் படி இந்த அபராதங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேத்யூஸ் தலைமையில் இலங்கை அணி அடுத்த 12 மாதத்துக்குள் இதே போன்ற விடயத்தை மீண்டும் செய்தால், மேத்யூஸ் இடைநீக்க தண்டனையை சந்திக்க நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: