இலங்கை கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு!

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை அணி வீரர்கள் உள்ளூர் பிராந்திய போட்டிகளிலும் தாராளமாக பங்கேற்கலாம் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பில், தேசிய போட்டிகள் நடைபெறும் அதே காலகட்டத்தில் உள்ளூர் போட்டிகளும் நடைபெறுமேயானால் இரண்டிலும் இலங்கை அணி வீரர்கள் பங்கேற்க தடை ஏதுமில்லை.
இந்த புதிய விதிமுறையை நிர்வாகம் கொண்டு வர முக்கிய காரணம் பல இளம் திறமையான இலங்கை வீரர்கள் பல வாய்ப்புகளை முன்பு இழந்திருக்கிறார்கள். இனி இந்த புதிய விதிமுறையால் அப்படி நடக்காது. இளம் வீரர்கள் நன்றாக விளையாடி தங்கள் திறமைகளை நிரூபிக்கலாம். மேலும் இப்படி செய்வதால் இலங்கை கிரிக்கெட் அணியின் தரம் உயரும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனாலும் எல்லாமே விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
தொடரை வெல்லுமா இலங்கை? 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி !
இலங்கை அணியின் தோல்வி: ஜெயவர்த்தன பதில்!
அவுஸ்திரேலியாவின் மூன்று வீரர்களின் தடை குறைக்கப்படுமா?
|
|