இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்!

Friday, May 19th, 2017

2017 ஐ.சி.சி.சம்பியன்ஸ் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி இன்று இங்கிலாந்து பயணமாகிறது.இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு மொவென்பிக் ஹோட்டலில் இடம்பெற்றது.

இங்கு கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ்,போட்டிகளை எதிர்கொள்ளக்கூடிய அளவில் இலங்கை அணி வீரர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இப்போட்டிக்காக இலங்கை அணி புதிதாக கண்டியில் நிர்மாணிக்கப்பட்ட செயற்திறன் மிக்க பயிற்சி நிலையத்தில் இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் கிரகம் போர்ட் (Graham Ford)தலைமையில் சிறப்பாக பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: